களுத்துறை, பயாகல, பாளையங்கொட பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் தீ பரவியுள்ளது.
குறித்த கடையில் கட்டிட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எரிவாயு வெடிப்பின் காரணமாக இத்தீவிபத்து இடம்பெறவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த களுத்துறை தீயணைப்பு பிரிவினரால் தீ அணைக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையினை பொலிஸார் ஆரம்பித்துள்ளன.
#SriLankaNews