கோழிப் பண்ணையொன்றில் தீப்பரவல்!!

Fire 3

பன்னல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம பகுதியிலுள்ள கோழிப் பண்ணையொன்றில் ஏற்பட்ட தீப் பரவலால் சுமார் 3 ஆயிரம் கோழிகள் உயிரிழந்துள்ளன என்று பன்னல பொலிஸார் தெரிவித்தனர்.

எரிவாயு கசிவினாலேயே இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.

நீர்கொழும்பு பகுதியில் உள்ள வியாபாரி ஒருவர் கோழிப் பண்ணையே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.

சுமார் 17 ஏக்கரில் அவர் கோழிப் பண்ணை நடத்திவருகின்றார். சுமார் 35 ஆயிரம் கோழிகள் உள்ளன. ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் 3 ஆயிரம் கோழிகள் உயிரிழந்துள்ளன.

#SrilankaNews

Exit mobile version