கோடாவுடன் கைதானவருக்கு 150,000 ரூபா அபராதம்!
கசிப்பு வடிக்கும் கோடாவுடன் கைதான இருவருக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மல்லாகம் நீதிமன்றத்தால் இவ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்த இருவர் 196 லீட்டர் கோடாவுடன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது அவர்களுக்கு தலா 75 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கடந்த 10 ஆம் திகதி தொல்புரம் – வீராவத்தை பகுதியில் 10 லீட்டர் கோடா மற்றும் ஒரு லீட்டர் கசிப்புடன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நபரொருவர் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு 25 ஆயிரம் ரூபா அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
Leave a comment