IMG 20220829 WA0050
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கலைப்பிரிவில் மாற்றுத் திறனாளியான மாணவி யாழில் முதலிடம்!

Share

2021 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று(28) வெளியான நிலையில், கலைப்பிரிவில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி உஷா கேசவன் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் அகில இலங்கை 22 ஆம் நிலையைப் பெற்றுள்ளார். ஊடகக்கற்கை, வரலாறு, தமிழ் ஆகிய மூன்று பாடநெறிகளுக்கும் குறித்த மாணவி 3ஏ சித்திகளைப் பெற்றார்.

மாற்றுத் திறனாளியான குறித்த மாணவி உயர்தர கல்வியின் போது சுன்னாகம் வாழ்வகத்தில் தங்கி இருந்தே தனது கல்வியை மேற்கொண்டார்.

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த இந்த மாணவி தனது ஆரம்பக் கல்வியை கொட்டடி நமசிவாயம் பாடசாலையிலும் உயர்கல்வியை வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையிலும் பயின்றார்.

இவரது தந்தை இறுதி யுத்தத்தில் உயிரிழந்தநிலையில் வறுமையின் மத்தியில் தயார் பவானியின் அரவணைப்பிலேயே வாழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

IMG 20220829 WA0051

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு அரசாங்கத்தின் முரண்பாடான செயல்: நாமல் ராஜபக்ச விமர்சனம்!

நாட்டில் 45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக ஜனாதிபதியும் அமைச்சர்களும் உறுதியளித்திருந்த நிலையில், திடீரென...

24 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுற்றுலா மேம்பாடு: 2026-2028 வரை ரூ. 2,667 மில்லியன் ஒதுக்கீடு!

இலங்கையின் சுற்றுலாத் துறையை நீண்டகால மற்றும் நிலைபேறான முறையில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, 2026 முதல்...

23 5
செய்திகள்இலங்கை

இலங்கை – நேபாளம் இடையே புதிய விசா விலக்கு ஒப்பந்தம்: அமைச்சரவை அனுமதி!

இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்,...

22 8
செய்திகள்இலங்கை

பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...