7 4
இலங்கைசெய்திகள்

யாழில் பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு

Share

யாழில் பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு

யாழில் (Jaffna) பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

நெசவுசாலை வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற குழந்தையே நேற்று (07.04.2024) அதிகாலை இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குழந்தையின் தாயார் நேற்று அதிகாலை 2 மணியளவில் குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். பின்னர் குழந்தை அதிகாலை 4 மணிக்கு மயக்க நிலையில் இருந்துள்ளது.

இதனையடுத்து, அளவெட்டி வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்றவேளை, மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு குழந்தையை அனுப்பி வைத்த போது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைக்காக குழந்தையின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1698195049 asw 2
இலங்கைசெய்திகள்

நாட்டின் வாழ்க்கைச் செலவு உயர்வு: நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ரூ. 65,684 தேவை – கொழும்பில் அதிகபட்சம்!

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் அண்மைய தரவுகளின்படி, நாட்டில் நான்கு பேர் கொண்ட...

MediaFile 5
இலங்கைசெய்திகள்

மன்னாரில் ஒரு வாரத்திற்கு இறைச்சி விற்பனைக்குத் தடை: பொது சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவிப்பு!

மன்னார் மாவட்டத்தில் நேற்று (டிசம்பர் 3) முதல் ஒரு வார காலத்திற்கு மாட்டிறைச்சி, ஆடு மற்றும்...

image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...