கொரோனா தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாத A-30 வகை புதிய வைரஸ் பிறழ்வு இலங்கைக்குள் நுழையும் அபாயம் உண்டு என சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் கண்டறியப்பட்ட அனைத்து கொரோனா திரிபுகளும் குறுகிய காலத்துக்குள் இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளது.
அவற்றைப் போலவே இந்த மாறுபாடு வைரஸ் பிறழ்வும் நாட்டினுள் எந்த நேரத்திலும் கண்டறியக் கூடும் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த புதிய மாறுபாடு நாட்டுக்குள் நுழைந்து பரவத் தொடங்கினால், நிச்சயமாக ஒரு பேரழிவு சூழ்நிலை ஏற்படும்.
எனவே, சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்திய அவர், புதிய திரிபுகளை தள்ளி வைத்திருப்பதே எமக்கு ஒரே வழி என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய கொரோனா வைரஸ் திரிபு தொடர்பில் இலங்கை எச்சரிக்கையுடன் இருக்கின்றது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment