rtjy 98 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் 97 மரங்கள் முறிந்து விழும் அபாயம்

Share

கொழும்பில் 97 மரங்கள் முறிந்து விழும் அபாயம்

பொரளை பிரதேசத்தில் அதிகளவான மரங்கள் முறிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பொரளை பிரதேசத்தில் ஆபத்தில் உள்ள 97 மரங்கள் இனங்காணப்பட்டுள்ளன. கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பிற்குள் 329 ஆபத்தில் உள்ள மரங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

சமகாலத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரங்கள் முறிந்து விழும் அபாயம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

கொழும்பு நகரில் அபாய நிலையில் உள்ள 360 மரங்கள் தொடர்பில் பொதுமக்களும் பொலிஸாரும் கொழும்பு மாநகர சபைக்கு அறிவித்துள்ளனர்.

கொழும்பு நகரில் ஆபத்தான 214 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தின் நிபுணர்கள் குழு அண்மையில் கொழும்பு நகரில் அழிந்து வரும் மரங்களை ஆய்வு செய்ததுடன், 700 மரங்கள் பரிசோதிக்கப்பட்டன.

நாட்டின் எந்தவொரு நகரத்திலும் ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், குறிப்பிட்ட மரங்களை வெட்டுவதற்கான பரிந்துரைகளைப் பெறுவதில் சிக்கல்கள் இருப்பதாக மாகாண மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...