7 40
இலங்கைசெய்திகள்

கடந்த ஆண்டில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 77 அரசாங்க ஊழியர்கள் கைது

Share

கடந்த ஆண்டில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 77 அரசாங்க ஊழியர்கள் கைது

கடந்த 2024ஆம் ஆண்டில் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் 77 அரசாங்க ஊழியர்கள் இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட அரச ஊழியர்களில் ஆகக்கூடுதலானவர்கள் பொலிஸார் என்று தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு 22 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.​

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஊழியர்கள் ஆறு பேரும் இந்தக் காலப்பகுதியில் இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதற்கு அடுத்ததாக நீதிமன்ற ஊழியர்கள் ஐந்து பேர் இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் கீ்ழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே ​போன்று கிராம அலுவலர்கள் மூன்று பேர், பாடசாலை அதிபர்கள் மூன்று பேர் உள்ளடங்கலாக கடந்த ஆண்டில் மொத்தமாக 77 அரச ஊழியர்கள் இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...