இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் – 747 பேர் கைது: நாடாளுமன்றில் வெளிப்படுத்திய அநுர தரப்பு

Share

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் – 747 பேர் கைது: நாடாளுமன்றில் வெளிப்படுத்திய அநுர தரப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை 747 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.

குற்றவியல் விசாரணைகள் திணைக்களம், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் இன்று (07) நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உயர் நீதிமன்றில் 14 வழக்குகளில் 100 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் அதி விசேட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதன்படி, இது குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், சனல் 4 ஊடாக வெளியான விடயங்கள் மற்றும் அதற்குப் புறம்பான விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட விடயங்களின் அடிப்படையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அந்த விசாரணைகளின் பின்னர் வெளிப்படுத்தப்படும் உண்மைகளின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், இந்த விசாரணைகள் புதிய கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நவம்பர் 11ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, 12 சிவில் சாட்சிகள், 7 இராணுவத்தினர், 24 காவல்துறை அதிகாரிகள், 3 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 48 பேரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
432e7679 1282 465e 9bbd 9fff0c004877
இலங்கைசெய்திகள்

மாலைத்தீவில் 355 கிலோ போதைப்பொருளுடன் கைதான 5 இலங்கையர்கள் 30 நாட்கள் தடுப்புக் காவலில்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்!

355 கிலோகிராம் ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட...

th
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாகப் படகில் இந்தியா சென்ற இலங்கையர் கைது: மன்னார் குடும்பஸ்தர் தனுஷ்கோடியில் பிடிபட்டார்!

சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர்...

Untitled design 2
செய்திகள்அரசியல்இலங்கை

பொய்க் குற்றச்சாட்டு வழக்கு: தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவைக் கைது செய்யப் பிடியாணை உத்தரவு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை (Thusitha Halloluwa) கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...