இந்தியாவின் 73 வது குடியரசு தின நிகழ்வுகள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் பதில் துணைதூதுவர் ராம் மகேஸ் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் இந்திய துணைத்தூதரகத்தின் பதில் துணைதூதுவர் ராம் மகேசினால் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவரின் சிறப்புரை பதில் துணைத்தூதுவரால் வாசிக்கப்பட்டது.
இன்றைறை குடியரசு தின நிகழ்வுகள் சுகாதார நடைமுறை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட விருந்தினர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews