ராகம மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட 07 பேர் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
23 வயதான இராஜாங்க அமைச்சர் ஒருவரின் மகன் நேற்று (02) இரவு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் நான்கு மருத்துவபீட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
#SriLankaNews
Leave a comment