23 4
இலங்கைசெய்திகள்

சீனாவுடன் ஏழு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் அநுரவின் அரசாங்கம்

Share

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) நான்கு நாள் சீன உத்தியோகபூர்வ விஜயத்தின் போது முதலீடு, மின்சாரத் துறை, கடற்தொழில் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விவசாயம், சுற்றுலா, கல்வி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளும் இதில் அடங்கும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herat) கூறியுள்ளார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதற்கு சீனாவின் ஆதரவை இலங்கை நாடும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மேலதிகமாக, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கான சீனாவின் ஆதரவு குறித்தும் விவாதிக்கப்படும் என்று வெளியுறவுதுறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், அநுரகுமார திசாநாயக்க, 2025 ஜனவரி 14 முதல் 17 வரை சீனாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி திசாநாயக்க, பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து ஜனாதிபதி ஜின்பிங்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார்,

அத்துடன், சீனப் பிரதமர் லி கியாங் மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுத் தலைவர் ஜாவோ லெஜி ஆகியோரையும் அவர் சந்திப்பார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...