பாஷையூரில் வாள்வெட்டு குழு அட்டகாசம்! – 7 பேர் கைது

0b7b205f pearlonenews தாக்குதல் attack

வீடு ஒன்றுள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 பேர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம்  நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பாஷையூர் அந்தோனியார் கோயில் அருகில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள வீடு ஒன்றுள் புகுந்த குறித்த வன்முறைக்கும்பல் வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் வீட்டாரையும் அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தை முற்றுகையிட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த 7 பேரை கைதுசெய்துள்ளனர்.

கைதானவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் , வாள், கம்பி மற்றும் கட்டை போன்றவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

கைதுசெய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருள்களும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version