கொழும்பு, தாமரை கோபுரம் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டு 3 நாட்களுக்குள் 7.5 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.
இந்த 3 நாட்களில் தாமரை கோபுரத்தைப் பார்வையிடுவதற்காக 14 ஆயிரம் பேர் வருகை தந்திருந்ததாக தாமரை கோபுர தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கு வழங்கப்படும் கால அளவு நேற்று(17) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நண்பகல் 12 மணி முதல் இரவு 11 மணி வரை தாமரை கோபுரத்தை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அனுமதிச்சீட்டு இரவு 10 மணி வரை மாத்திரமே விநியோகிக்கப்படும் என ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment