மட்டக்களப்பு கடற்பரப்பில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட மேலும் 62 பேர் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள் முல்லைத்தீவு, திருகோணமலை, வல்வெட்டித்துறை, மானிப்பாய், கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, அச்சுவெலி, காங்கேசன்துறை, சந்திவெளி, தர்மபுரம் மற்றும் நாத்தாண்டியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளார்.
10 சிறார்களும், 09 பெண்களும் இவர்களுள் உள்ளடங்குகின்றனர்.
அதேவேளை, கடந்த 10 நாட்களில் மாத்திரம் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட மேலும் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
#SriLankaNews