இந்தியக் கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 இலங்கை மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தியக் கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, அவர்கள் பயணித்த படகும் இந்தியக் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கைதான 6 இலங்கை மீனவர்களும், திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் காரைக்கால் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
#SriLankaNews