Parliament of Sri Lanka 04 850x460 acf cropped 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

எம்.பி ஒருவரின் பாதுகாப்புக்கு 6 பொலிஸார்!!!

Share

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 6 பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உள்ளிட்ட ஆறு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பிரதேச பொலிஸ் நிலையங்களில் தற்போது கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் தமக்கு விருப்பமானவர்களை அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் இணைத்துக்கொண்டு தமது பாதுகாப்பு சேவைகளுக்கு அவர்களை ஈடுபடுத்திக் கொள்ள கூடிய வாய்ப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் நாட்டில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் அவர்களின் வீடுகளின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் நாடாளுமன்றஉறுப்பினர் ஒருவரும் மரணமடைந்துள்ளார்.

அதனைக் கவனத்திற் கொண்டே நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு பொலிஸ் மாஅதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...