சீதுவை – துன்முல்லவத்தை பிரதேசத்தில் 6 மாதப் பெண் குழந்தையைக் கொலை செய்து, கழிவறைக் குழியில் வீசிய பெற்றோரைச் சீதுவைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குழந்தையைக் கழுத்து நெரித்துப் படுகொலை செய்த தாயார், சடலத்தைக் கிணற்றில் வீசியுள்ளர்.
மாலையில் கணவர் வீட்டுக்கு வந்து, குழந்தையைப் பற்றி விசாரித்தபோது, குழந்தையைக் கொன்று கிணற்றில் போட்டதாக மனைவி தெரிவித்துள்ளார்.
மனைவியைக் காப்பாற்றுவதற்காகக் கிணற்றிலிருந்து குழந்தையின் சடலத்தை எடுத்த கணவன், அதைக் கழிவறைக் குழியில் வீசியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் கூறினர்.
#SriLankaNews
Leave a comment