vikatan 2020 06 bca0fac8 0031 4a32 b3bb 89235e5a6149 vikatan 2019 08 98e96d0b 5042 4f3a b203 c46a62109a02 Arrest 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

6 இலட்சம் பெறுமதியான இறால், கணவாய் திருட்டு! – ஒருவர் கைது

Share

பேலியகொட மீன் சந்தையில் ரூபா 6 இலட்சம் பெறுமதியான இறாலும் கணவாயும் திருடப்பட்டது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதி இரவு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 11 இறால் பெட்டிகளையும் 18 கணவாய்ப் பெட்டிகளையும் சந்தேக நபர் திருடிச் சென்றுள்ளதாக பேலியகொட பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். திருடிய இறால் மற்றும் கணவாய் பெட்டிகயை இன்னொரு குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைக்கும் போது குறித்த நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களனி அம்பகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர்  என்றும் அவர் பேலியகொட மீன் சந்தை வளாகத்தில் தொழில் செய்பவர்  எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...