பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோர் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றில் இன்று (24) ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாலி பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் உட்பட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று நேற்று (23) கல்வி அமைச்சுக்குள் கலவரமாக நடந்துகொண்டனர்
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பிக்கு மாணவர்கள் உட்பட 57 பேரை கைது செய்தனர்.
#SriLankaNews
Leave a comment