கொழும்பு துறைமுகத்தில் 5,000 டொன் சீனி சிக்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சதொச சீனி விநியோகஸ்தர்களால் இறக்குமதி செய்யப்பட்ட சீனியே துறைமுகத்தில் தேங்கியுள்ளது. இதன் காரணமாகவே தற்போது நாட்டில் சீனியின் விலை அதிகரித்துள்ளது என சதொச நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சதொச நிறுவனத்தின் பிரதான அதிகாரியால் தாமத கட்டணம் செலுத்தி ஏற்பட்ட தாமதமே, தற்போது சீனித் தட்டுப்பாடு ஏற்பட காரணமாகும். தற்போது சதொச நிறுவனம் தலையிட்டு துறைமுகத்தில் தேங்கியுள்ள குறித்த சீனித் தொகையை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த சீனி தொகை நாளை அல்லது நாளைமறுதினம் விடுவிக்கப்படும் எனவும், அதன் பின்னர் அவை உரிய முறையில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் சதொச நிறுவனத்தின் தகவல்கள் தெரிவித்துள்ளன.