இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
அத்துடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ரயில் கட்டணத்தை அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
#SriLankaNews
Leave a comment