வவுனியா முதியோர் இல்லத்தில் 50 பேருக்கு தொற்று! – 6 பேர் சாவு
வவுனியாவில் உள்ள முதியோர் இல்லத்தில் 50 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்படடுள்ளது.
அத்துடன் அங்கு கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி மூவர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா பம்பைமடுவில் உள்ள முதியோர் காப்பகத்திலேயே 50 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அந்த இல்லத்தைச் சேர்ந்த இருவர் கடந்த சில நாள்களுக்கு முன்னர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்த நிலையில் நேற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது முதியோர் காப்பகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது
குறித்த காப்பகத்தில் இருப்பவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையிலேயே 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Leave a comment