1659756301 1659753796 drive L
இலங்கைசெய்திகள்

தினமும் 50 சாரதி அனுமதிப்பத்திரங்கள்!

Share

ஒரு நாள் சேவையின் கீழ் 50 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை அச்சிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.

திணைக்களத்தினால் வழங்கப்பட வேண்டிய 6 இலட்சம் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான அட்டைகளை வழங்கும் இலக்கை அடையும் வரை மேற்குறிப்பிட்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு 1,700 அட்டைகளை அச்சிடும் திறன் திணைக்களத்துக்கு உள்ளதால், ஒரு நாள் சேவையில் 50 அட்டைகளையும் 1650 அட்டைகளை 6 இலட்சம் தற்காலிக அனுமதிப் பத்திரம் பெற்றவர்களுக்காகவும் அச்சிடவுள்ளதாக ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

திணைக்களத்தின் கொள்ளளவை ஈடுசெய்யும் வகையில் 5 இலட்சம் அட்டைகள் கிடைத்துள்ளதாகவும், கடந்த திங்கட்கிழமை (14) முதல் அட்டைகளை அச்சிட ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 18
இலங்கைசெய்திகள்

நீண்டதூரப் போக்குவரத்து சாரதிகள் குறித்து விசேட கவனம் செலுத்த தீர்மானம்

நீண்ட தூரப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து சாரதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக மோட்டார்...

4 17
இலங்கைசெய்திகள்

ரணில் போல் அநுரவுக்கு தற்றுணிவு கிடையாது! விமல் விளாசல்

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அநுர அரசு பகிரங்கப்படுத்தும் என்ற நம்பிக்கை கிடையாது....

3 18
இலங்கைசெய்திகள்

ஒரு மில்லியனை எட்டிப்பிடிக்கவுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவிரைவில் ஒரு மில்லியனை எட்டிப்பிடிக்கும் நிலையை நெருங்கியுள்ளது....

2 26
இலங்கைசெய்திகள்

ஆட்சி அமைக்க தடை ஏற்படுத்தினால் பதிலடி கொடுக்கப்படும் – ரில்வின்

தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைப்பதற்கு தடை ஏற்படுத்தினால் அதற்கான பதிலடி கொடுக்கப்படும் என ஜே.வி.பியின்...