மாத வருமானம் 1 லட்சத்துக்கும் அதிகமாக பெறுபவர்கள் அனைவருக்கும் 5 வீத வரி விதிக்கப்பட வேண்டும் என வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடக நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசுக்கு கல்வி மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த சிக்கல் நிலையிலிருந்து மீள்வதற்கு கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக நலன் பராமரிப்புக்கு குறைந்த பட்சம் ‘சமூக பாதுகாப்பு பங்களிப்பு’ எனும் அடிப்படையில் நூறுக்கு 5 வீத வரி விதிக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாத வருமானம் சராசரியாக ஒரு லட்சத்துக்கும் மேல் பெறும் அனைவரிடமும் இந்த வரி விதிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment