வவுனியாவில் இதுவரை காலப்பகுதியில் 49 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என வவுனியா மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் வவுனியாவில் 3 ஆயிரத்து 585 பேருக்கு இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டச் செயலகத்தில் வவுனியா மாவட்ட கொரோனா சமகால நிலைமை தொடர்பாக இன்றையதினம் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Leave a comment