நாடளாவிய ரீதியில் மின்சார சபை ஊழியர்கள் ஒன்றுகூடி பெரும் போராட்டத்தை நடத்துவது குறித்த இறுதித் தீர்மானத்தை நாளை அறிவிக்கவுள்ளோம் என மின்சார சேவையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்கள் நாடு இருளில் இருக்க நேரிடும் என மின்சார சேவையாளர்கள் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் மின்துண்டிப்பை மேற்கொள்ளாது தொழில் சங்க நடவடிக்கையில் மட்டும் ஈடுபட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இலங்கை மின்சார சேவையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
நாளை 3ஆம் திகதி நாங்கள் மாபெரும் போராட்டத்துக்கு தயாராகி உள்ளோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை மின்சார சபை மற்றும் துறைமுக அதிகார சபையின் அனைத்து ஊழியர்களும் கலந்து கொள்வர்.
இதற்கான அவர்கள் நாடு முழுவதிலும் இருந்து வருகை தரவுள்ளனர்.
இந்த நிலையில் மின்சார விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்பட்டால் அதனை சரி செய்ய எவரும் இருக்கமாட்டார்கள்.
இந்தப் போராட்டம் கெரவலப்பிட்டி, யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் அமெரிக்க நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தக்கு அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது.
அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளியிடும் போது அரசு நிச்சயம் அதற்கு செவிசாய்க்கும் என எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மின் விநியோகத்தை நிறுத்தவதன் மூலம் பொதுமக்களை அசெளகரியங்களுக்கு உள்ளாக்க நாம் விரும்பவில்லை.
எவ்வாறெனினும் தங்களது தொழிற்சங்கத்தினர் இல்லாதுவிடின் மின் விநியோக நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாது என அவர் எச்சரித்துள்ளார்.
#srilanka