.”நாட்டின் நலன் கருதியேனும் இந்த அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர்,
” இந்த அரசால் முடியாது என்பது உறுதியாகிவிட்டது. எனவே, சர்வக்கட்சி இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும். அதற்காக இந்த அரசு பதவி விலக வேண்டும். அதுதான் தற்போது ஏற்புடைய நடவடிக்கை.
இது எமது நாடு. அதனை ஒரு குடும்பத்துக்காக விட்டுக்கொடுக்க முடியாது.” – என்றும் குறிப்பிட்டார்.
Leave a comment