யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 414 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜென் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அன்ரிஜென் பரிசோதனைகளில் 364 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பி.சி.ஆர். பரிசோதனைகளில் 50 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, சாவகச்சேரியில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். சாவகச்சேரியில் 124 பேரும், கரவெட்டியில் 102 பேரும், பருத்தித்துறையில் 56 பேரும் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அண்மைய நாள்களாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் மாவட்டம் கொரோனா அபாய வலயமாக மாறி வருகின்றது.
பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Leave a comment