மேலும் 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய சரக்குக் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார்.
நேற்று மாலை 7.00 மணியளவில் எரிவாயுவை இறக்கும் பணி ஆரம்பமாகியுள்ளதாக அவர் கூறினார்.
“காஸ் சிலிண்டர் நிரப்பும் செயல்முறை தற்போது நடைபெற்று வருகிறது, ஒரு நாளைக்கு சுமார் 100,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும்,” என்றும் அவர் கூறினார்.
#SrilankaNews
Leave a comment