a8
இலங்கைசெய்திகள்

வெள்ளவத்தை கடற்பகுதியில் 40 முதலைகள்!!

Share

வெள்ளவத்தை கடற்பகுதியில் 40 முதலைகள் சுற்றி திரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கின்ரோஸ் உயிர்காக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் திவங்க பெர்னாண்டோ என்பவர் வெள்ளவத்தை கடலில் நீராடும் போது முதலை குட்டியொன்றை பிடித்துள்ளார். குறித்த முதலைக் குட்டியை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சவோய் சினிமாவிற்கு அருகில் உள்ள கால்வாயில் நான்கு பெரிய முதலைகளை அவதானிக்கப்பட்ட நிலையில், வெள்ளவத்தை கடற்பகுதியில் 40 முதலைகளை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த முதலை அச்சுறுத்தல் குறித்து கின்ரோஸ் உயிர்காப்பு நிறுவனம் வனவிலங்கு அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கடலில் குளிப்பதும் ஆபத்தாக மாறியுள்ளது.

கடந்த வருடம் தெஹிவளையில் மீனவர் ஒருவர் முதலையால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடலில் குளிக்க செல்லும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...