விகிதாசார முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு சுமார் 4 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி செலவாகுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அத்துடன், சட்டங்கள் திருத்தப்பட்டதன் பின்னர் பழைய முறைப்படி மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த முடியுமெனவும், புதிய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக இருந்தால், அதற்காக நீண்ட காலத்தை செலவழிக்க நேரிடுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பழைய முறைமையின்கீழ்தான் மாகாணத் தேர்தல் இடம்பெறும்.
பழைய முறைமையின் கீழ் மாகாணத் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு சுமார் 4 ஆயிரம் மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், சுகாதார நடைமுறைகளின் பிரகாரம் தேர்தலை நடத்துவதாக இருந்தாலும் செலவு மேலும் அதிகரிக்கக்கூடும்.
#SriLankaNews
Leave a comment