நாளொன்றில் 4 மணிநேர மின்வெட்டை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு, இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமியா குமாரவடு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்;
சுமார் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு போதுமான 3000 மெற்றிக் தொன் டீசல் மாத்திரமே இலங்கை மின்சார சபை வசம் காணப்படுகின்றது.
மேலும், 22 நாட்களுக்கு மாத்திரம் தேவையான உராய்வு எண்ணெய், மின்சார சபையின் களஞ்சியசாலையில் உள்ளது.
இதன்படி, 03 நாட்களின் பின்னர் இலங்கை மின்சார சபைக்கு, மின் வெட்டை நடைமுறைப்படுத்தி மின்சார கேள்வியை குறைக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
அனுமதிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களின் நிர்மாணப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனடிப்படையில், புதிய மின் உற்பத்தி திட்டங்களை இரத்து செய்தல் ஆகிய காரணங்களினால், மின் வெட்டு நடைமுறைப்படுத்தும் சந்தர்ப்பங்களில், மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர மாற்று மின் உற்பத்தி நிலையங்கள் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.
#SrilankaNews
Leave a comment