22 6
இலங்கைசெய்திகள்

சட்டவிரோதமாக தங்கியிருந்த 34 பங்களாதேஷ் பிரஜைகள் கைது

Share

சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த 34 பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீசா காலம் பூர்த்தியனதன் பின்னர் நாட்டில் தங்கியிருந்த பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் பங்களாதேஷ் பிரஜைகளை கைது செய்துள்ளனர்.

சீதுவ பிரதேசத்தின் தங்குமிடமொன்றில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

9 முதல் 54 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு கிடைத்த புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பங்களாதேஷ் பிரஜைகள் வெலிசர தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் எனவும் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...

சூறாவளி
இலங்கை

டைபூன் சூறாவளியின் தீவிரம் – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

அரசு தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தகவல்...

Missing Persons Nuwara Eliya
இலங்கை

நிலவும் சீரற்ற காலநிலையால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச்...