குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இம்மாதத்தில் முதல் பத்து நாட்களில் மாத்திரம் 31 ஆயிரத்து 725 கடவுச்சீட்டுகளை விநியோகித்துள்ளது என அந்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதி திருமதி பியூமி பண்டார தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளொன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுகள் விநியோக்கப்பட்டுள்ளன.
வழமையாக 10 நாட்களில் சுமார் 10 ஆயிரம் வரையான பாஸ்போர்ட்டுக்களே விநியோகிக்கப்படும். எனினும், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், தொழில் நிமித்தம் பலர் நாட்டை விட்டு வெளியேறிவருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment