நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக தேசிய லொத்தர் சபைக்கு 300 கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனை தேசிய லொத்தர் சபையின் தலைவர் லலித் பியும் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது 41 நாட்களாக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக 300 கோடி ரூபா வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அரசுக்கு அதிக வருமானம் ஈட்டும் நிறுவனமான தேசிய லொத்தர் சபைக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்பு ஈடுசெய்ய முடியாதது ஆகும்.
அத்துடன் கொரோனா பரவல் காரணமாக தேசிய லொத்தர் சபையில் 25 ஆயிரம் விற்பனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே நாட்டை திறந்தவுடன் லொத்தர் சந்தையை திறப்பது அவர்களுக்கு நிவாரணமாக அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment