WhatsApp Image 2021 12 16 at 4.50.42 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசை பதவி விலகக் கோரி 3 நாட்கள் பாத யாத்திரை! – தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், மக்களின் தன்னெழுச்சி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் தேசிய மக்கள் சக்தி 3 நாட்கள் பாத யாத்திரையை முன்னெடுக்கவுள்ளது.

இதன்படி இன்று காலை 9 மணிக்கு, களுத்துறை – பேருவளை நகரில் குறித்த பாத யாத்திரை ஆரம்பமாகும்.

” ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டு மக்கள் போராடிவருகின்றனர். மக்களின் போராட்டம் வெற்றியளிக்கும். அதற்கு அரசியல் ரீதியான ஆதரவை வெளிப்படுத்துவதற்கும், போராட்ட இலக்கை அடைவதற்கும் பாத யாத்திரையை ஆரம்பிக்கின்றோம்.

இது தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டாலும் மக்களுக்கான போராட்டம். எனவே, அனைவரும் கட்சி பேதமின்றி பங்கேற்கவேண்டும். 19 ஆம் திகதி யாத்திரை கொழும்பை வந்தடையும்.” – என்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...