பறவை மோதியதில் விபத்தைச் சந்தித்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-731 இதன் காரணமாகத் தனது பயணத்தைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
தரையிறங்குவதற்கு ஏற்ற அளவிற்கு எரிபொருள் இருப்பு குறையும் வரை, அந்த விமானம் நீர்கொழும்பு – காயல் அருகே உள்ள கடல் பகுதியில் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் குறைந்த வேகத்தில் பயணித்துள்ளதுடன், காலை 10.21 மணிக்குத் தரையிறக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் உள்ளிட்ட ஒரு குழுவினருடன் சேர்த்து இந்த விமானத்தில் 246 பயணிகள் மற்றும் 10 பணியாளர்கள் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்டுநாயக்கவிலிருந்து இஸ்தான்புல்லுக்கான 6 மணி நேரப் பயணத்திற்காகப் புறப்பட்டுள்ளதுடன், அதுவரை விமானத்தில் 80,000 லீற்றர் எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது.
விமானத்தில் எரிபொருள் இருப்புடன் மீண்டும் தரையிறங்குவது சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் சமீபத்திய விதிகளுக்கு எதிரானது.
இதன் காரணமாக, தரையிறங்குவதற்கு ஏற்ற நிலைக்கு எரிபொருள் அளவு குறையும் வரை, 7,000 அடி உயரத்தில் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் பறக்க வேண்டியிருந்தது.