நிவாரண பொருட்களுடன் இலங்கை வருகிறது 2வது கப்பல்!

1655949315 1655948754 Indian Ship L

இலங்கை மக்களுக்கென தமிழக மக்களால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகளுடனான மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை நோக்கி புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கப்பலில் 14,712 தொன் கிலோ அரிசி, 250 தொன் பால்மா மற்றும் 38 தொன் கிலோ அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள் உட்பட 15,000 தொன் கிலோ பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய மக்களால் வழங்கப்பட்ட முதல் மனிதாபிமான உதவித்தொகை கடந்த மாதம் 22 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version