யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 2வது தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2 வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு
நாளை 12 ஆம் திகதி மற்றும் எதிர்வரும் 15ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக சுகநல நிலையத்தில், குறித்த தினங்களில், நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால்முற்பகல் 9 மணி – பிற்பகல் ஒரு வரை தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.
கடந்த ஒக்ரோபர் மாதம் சினோபார்ம் முதலாவது டோஸ் தடுப்பூசியை பெற்ற பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கே இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
தடுப்பூசி ஏற்ற வருபவர்கள், தடுப்பூசி அட்டை, தேசிய அடையாள அட்டை, பல்கலைக்கழக அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment