கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 25 மலைப்புலிகள் பொறிகளில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும், விலங்குகளை மீட்பதில் ஏற்பட்ட தாமதமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொறிகளில் சிக்கிய பெரும்பாலான புலிகள் சுமார் 15 மணித்தியாலங்களுக்குப் பின்னரே விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார். பொறிகளில் நீண்ட நேரம் சிக்கி கிடப்பதால் அதனால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக உடலில் ஏற்படும் இரசாயன மாற்றங்களாலும் உடல் உறுப்புகளில் ஏற்படும் காயங்களால் இந்த உயிரிழப்புகள் ஏற்படுவதாக வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
போதிய எண்ணிக்கையிலான வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் இல்லாததும் வனவிலங்கு கால்நடை மருத்துவர் அலுவலகங்கள் சில பகுதிகளில் இல்லாமையும் எரிபொருள் தட்டுப்பாடு, மயக்க மருந்து பணியாளர்கள் வருவதில் தாமதம். மேலும், கள வனவிலங்கு அலுவலர்கள் இல்லாததாலும் புலிகள் பொறிகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
#SriLankaNews