நாட்டில் சட்டவிரோத மதுபான ( கசிப்பு ) பாவனை அதிகரித்துள்ளது என பொலிஸார் மற்றும் கலால்வரி திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.
நாட்டில் கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காலப்பகுதியில் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, தற்போது சட்டவிரோத மதுபான பாவனை மக்களிடையே அதிகரித்துள்ளது.
தற்போது ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள கடந்த 24 நாள்களில் மட்டும் 240 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய சட்டவிரோத மதுபானம் நாட்டு மக்களால் அருந்தப்பட்டுள்ளது என பொலிஸார் மற்றும் கலால் வரித் திணைக்களம் இணைந்து உறுதிப்படுத்தியுள்ளது.
Leave a comment