இந்திய மீனவர்கள் 23 பேர் கைது!

1669646110 Navy Arrest 2

எல்லை தாண்டி மீன் பிடித்த 23 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று (28) கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஐந்து படகையும் அதிலிருந்த 23 இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கைதான மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு நாளை​ (29) ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version