சுமார் 220 மில்லியன் பெறுமதியுடைய 16 கிலோ தங்கம் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த பெரும் தங்க கடத்தல் போலியான வர்த்தக பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாகன பாகங்கள் மற்றும் மின் இயந்திரங்களின் பாகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன என தெரிவித்து குறித்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பொருள்களின் உட்புற தொழில்நுட்ப பாகங்கள் தங்கத்தால் தயாரிக்கப்பட்டு அதில் பொருத்தப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டுபாயிலிருந்து வாகன பாகங்கள் மற்றும் மின் இயந்திரங்களின் பாகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன என கூறி 16 கிலோ தங்கம் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளன என எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தங்கத்தின் சந்தை மதிப்பு 220 மில்லியன் ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் மேலதிக விசாரணைகளை சுங்க போதைப்பொருள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.