விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனிஷ் அலி உள்ளிட்ட 21 பேருக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வசந்த முதலிகே, ஜோசப் ஸ்டாலின், லஹிரு வீரசேகர, எரங்க குணசேகர மற்றும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் ஆகியோரின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவர்கள் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாக தமக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதாக கோட்டை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்த நிலையில், அதனை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, குறித்த நபர்களின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்து உத்தரவு பிறப்பித்த நீதவான், அந்த உத்தரவை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
#SriLankaNews
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment