10 56
இலங்கைசெய்திகள்

ஜப்பானில் கிடைக்கப்போகும் வேலைவாய்ப்புகள்: மக்களுக்கு வெளியான நற்செய்தி

Share

ஜப்பானில் (Japan) தாதியர் பணிகளுக்காக இலங்கை தொழிலாளர்களின் பயிற்சிக் குழுவை நியமிப்பதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் ஐ.எம். ஜப்பான் (IM Japan) இடையேயான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் தாதியர் வேலைத் துறையில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிடங்கள் காணப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தவிசாளர் கோசல விக்ரமசிங்க மற்றும் ஐஎம் ஜப்பானின் தவிசாளர் கனமோரி ஹிட்டோஷி ஆகியோருக்கு இடையே இலங்கையர்களை ஜப்பானில் வேலைக்கு அனுப்புவதற்கான எதிர்கால ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தவிசாளர் கோசல விக்ரமசிங்க, இலங்கைக்கு தாதியர் துறையைத் தவிர வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜப்பானிய பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து, எதிர்காலத்தில் இலங்கைக்கு அதிகமான ஜப்பானிய வேலை வாய்ப்புகளை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கனமோரி ஹிடோஷியும் உறுதியளித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...