3 41
இலங்கைசெய்திகள்

சிறீதரன் மீது பயங்கரவாத தடைச் சட்டம் பாய்ந்ததா – சபையில் கேள்வி எழுப்பிய எம்.பி

Share

சிறீதரன் மீது பயங்கரவாத தடைச் சட்டம் பாய்ந்ததா – சபையில் கேள்வி எழுப்பிய எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு விமான நிலையத்தில் இடம்பெற்ற விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem ) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (21.1.2025) உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் நானும் அங்கு இருந்தேன்.

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவருக்கு எதிராக பயணத்தடை உள்ளதாக கூறினர்.

அதனை தொடர்ந்து கலந்துரையாடி நாம் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தோம். இத்தகைய விடயங்கள் காணப்படின் நீதிமன்றத்தின் உத்தரவு அவசியம்.

ஆனால் அதிகாரிகள் அவருடைய நாடாளுமன்ற வரப்பிரசாதத்தை மீறும் வகையில் செயற்பட்டுள்ளனர். அரசாங்கம் இன்னமும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு இந்த விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem ) தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 68f34f316f8d5
செய்திகள்இலங்கை

மண்ணில் புதைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தியின் கைப்பேசி மீட்பு: விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்கள்!

‘கணேமுல்ல சஞ்ஜீவ’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா...

25 68f0b45097e66
செய்திகள்இந்தியாஉலகம்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது: ட்ரம்ப் தகவல்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்...

image c348b91fcc
செய்திகள்இலங்கை

அடுத்த கல்வியாண்டு முதல் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக சுய கற்றல் கையேடுகள்

அடுத்த கல்வியாண்டில் இருந்து, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று...

25 68f3476a27f6c
செய்திகள்உலகம்

பொதுஜன பெரமுன வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை கட்டாயம்: நாமல் ராஜபக்ச

எதிர்காலத் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை பெறப்படும் என்று கட்சியின் தேசிய...