Connect with us

இலங்கை

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிப்பது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை

Published

on

4 26

கிளிநொச்சி (Kilinochchi) – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிப்பது யார் என்பது குறித்து அமைதியின்மை எழுந்த நிலையில் காவல்துறையினர் தலையீடு செய்து அமைதியை ஏற்படுத்தியுள்ளனர்.

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பதற்காக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக தரப்புகள் முனைந்த போது குறித்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் நினைவேந்தலுக்காக 2016ம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் இதன் போது பிரதான சுடரினை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் (S.Shrithran) ஏற்றி, மாவீரர் குடும்பங்களும் சுடர் ஏற்றி அஞ்சலிக்கப்பட்டது.

இங்கு தொடர்ந்து 9 ஆண்டுகளாக அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. பல்லாயிரம் மக்கள் திரண்டு அஞ்சலிக்கும் குறித்த மாவீரர் துயிலுமில்லம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், கடந்த வருடம் பிரதான சுடர் ஏற்றுவதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த துயிலுமில்ல நிர்வகிப்பு தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டது.

மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பு, மாவீரர் துயிலும் இல்லங்கள் பொது மயப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்றைய தினம் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் நிர்வாக தெரிவை நடத்த அழைப்பு விடுத்திருந்தனர்.

இதேவேளை, குறித்த பகுதிக்கு சென்றவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தற்போது உள்ள நிர்வகிக்கும் தரப்பே தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அவ்வமைப்பின் அழைப்பில் சென்ற மக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்பகுதியில் அமைதியின்மை தொடர்ந்த நிலையில் கிளிநொச்சி காவல்துறையினர் அங்கு சென்று அப்பகுதியில் கூட்டமாக நிற்க வேண்டாம் எனவும், பிரச்சினைகள் இருப்பின் காவல்துறையில் முறைப்பாடு செய்யுமாறும் தெரிவித்து படிப்படியாக அங்கிருந்த மக்களை வெளியேற்றி அமைதியின்மையை கட்டுப்படுத்தினர்.

இதே வேளை, குறித்த துயிலுமில்ல வளாகத்திற்குள் அத்துமீறி செல்ல வேண்டாம் என்ற அறிவித்தலை கரைச்சி பிரதேச சபையினர் ஒட்டியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சுப்பையா தெரிவிக்கையில், “மக்களின் நினைவேந்தலை தடுக்கும் வகையிலும், நிகழ்ச்சி நிரல் ஒன்றின் அடிப்படையிலும் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பு செயற்படுகின்றது.

அதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இதுவரை நடந்த நடைமுறைகளே பின்பற்றப்பட்டு நினைவேந்தல்கள் நடைபெறும். மக்கள் தெளிவாக செயற்பட வேண்டும்.” என தெரிவித்தார்.

அத்துடன் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பின் தலைவர் பார்த்தீபன் தெரிவிக்கையில், “மக்கள் மயப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இன்று சிறீதரனுடன் தொடர்புடைய சிலர் அங்கு குழப்பங்களை ஏற்படுத்தினர். நாகரீகமற்ற வார்த்தைகளை பேசினர். தொடர்ந்தும் சிறீதரனின் அரசியலிற்குள் துயிலுமில்லங்களை அனுமதிக்க முடியாது.

சிறீதரன் தனது வாக்குக்காக கனகபுரம், முழங்காவில், தேராவில், சாட்டி ஆகிய துயிலுமில்லங்களை பயன்படுத்துகிறார். அரசியலிற்குள் சிக்கியுள்ள துயிலுமில்லங்களை மக்கள் மயப்படுத்த வேண்டும். அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்க உள்ளோம்“ என தெரிவித்தார்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 14 பிப்ரவரி 2025 இன்று காதலர் தினம் – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 14.02. 2025, குரோதி வருடம் மாசி மாதம் 2 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தை...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 13 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 13.02.2025, குரோதி வருடம் மாசி மாதம் 1, வியாழக் கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உத்திராடம், திருவோணம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 12 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 12.02.2025, குரோதி வருடம் தை மாதம் 30, புதன் கிழமை, சந்திரன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் பூராடம், உத்திராடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 11 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 11 பிப்ரவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 11.02.2025, குரோதி வருடம் தை மாதம் 29, செவ்வாய்க் கிழமை,...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 10 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 10 பிப்ரவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 10.02.2025 குரோதி வருடம் தை மாதம் 28, திங்கட் கிழமை,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்7 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 09 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 09 பிப்ரவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 9.02.2025, குரோதி வருடம் தை மாதம் 27 ஞாயிற்று கிழமை,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 07 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 7.02. 2025, குரோதி வருடம் தை மாதம் 25 வெள்ளிக் கிழமை, சந்திரன் ரி ஷபம் ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் சுவாதி, விசாகம்...