12 5
இலங்கைசெய்திகள்

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி : இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவல்

Share

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி : இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவல்

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் (Regional Meteorological Centre, Chennai) தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, எதிர்வரும் 12ஆம் திகதி , தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கை – தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, வங்காள விரிகுடாவில் மணிக்கு 55 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையின் (Sri Lanka) கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக டிசம்பர் 10ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...