இலங்கை
இந்தியா தொடர்பில் அநுர அரசாங்கத்திற்கு ரணில் வழங்கியுள்ள அறிவுரை
இலங்கையில் தற்போது அமையப்பெற்றுள்ள அரசாங்கம் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremsinghe) தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகருக்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்நகரில் அமைந்துள்ள பழைய கோட்டை உட்பட பல அரச மாளிகைகளுக்கு விஜயம் செய்துள்ளார்.